சனி, 25 பிப்ரவரி, 2012

.

“சுவிஸ் தமிழர்கள் ஒன்றிணைவில் எழுகை 2012”

தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தங்களால் பெரும் துன்பத்தை சுமந்து நிற்கும் எம் உறவுகள் மறுவாழ்வுக்காக ஏங்கி நின்ற போது உலகத்தின் கவனிப்பு எம் இனத்தின் முழுமையான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

தாயகத்தில், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளால் கூட எம் மக்களின் அபிலாசைகளையோ, அடிப்படை வசதிகளையோ, செய்து கொடுக்கும் பொருளாதார அரசியல் பலமின்றியே இருக்கும் நிலை உள்ளது. எனவே வாழ வழியின்றி, உதவுவோர் யாருமின்றி கை காலிழந்து, வாழும் வீடிழந்து, பெற்ற பிள்ளைகளையிழந்து, கட்டிய கணவனை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, நாளைய பொழுது நமக்கானதா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கும் எம் உறவுகளோ பல ஆயிரம். அவர்களின் வேதனைகளோ சொல்லி மாளாதவை. இவர்களில் ஒரு சிலருக்கு ஆங்காங்கே தனித்தனியாகவும், சில அமைப்புகள் சார்ந்தும், சில உதவிகளை புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் செய்து வருகின்றனர். இந்த ஒரு சிறுதுளி நம்பிக்கை மட்டும் மனதில் துளிர்விட வேதனைக்குப் பின் வசந்தம் வரும் என காத்திருக்கும் மக்களுக்கு உதவ வேண்டியது நம் தார்மீக கடமை. போரனர்தத்திற்கு பெரும் விலை கொடுத்த உறவுகளின் துயரை துடைக்க தமிழ் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி, 14.04.2012, 15.04.2012 இல் ஈழத் தமிழினம் மீண்டும் உயிர்த்தெழும் காலத்திற்காக இனியொரு விதி செய்வோம் என சுவிற்சர்லாந்து ஆன்மிக, கலை, இலக்கிய, வர்த்தக, விளையாட்டுத்துறை, தொழில்நுட்ப, ஊடக, சமூகநல அமைப்புக்களின் ஒன்றிணைவில் எழுகை 2012 எனும் நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி அனைத்தையும் வட கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் உடலுறுப்புக்களை இழந்த வலுவற்றோர்க்கும், பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற சிறு பிள்ளைகளுக்கும், கணவனையிழந்த விதவைப்பெண்களின் சுயதொழில் மறுவாழ்வுக்குமாக, தமிழர் தாயகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிய தகவல் சேகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டே நிதி பகிர்ந்தளிக்கபப்படவுள்ளது.

மறுவாழ்வின் தேவையென்பது, பூதாகாரமாகவுள்ளது என்பதை அனைத்து மக்களுக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆகவே அரசியல் காழ்புணர்ச்சிகளையெல்லாம் மறந்து அனைத்து மக்களும் தாய்மை உணர்வோடு பங்கெடுத்துக்  கொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டிக் கொள்கிறோம்!
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லோர்க்கும் நாடு, இனம், ஊர், உறவுப் பற்று என்பது பொதுவுடமையல்லவா? எனவே ஏனைய புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து இம்மாதிரியான மக்கள் மறுவாழ்வுப் பணி செய்தால், ஒரே நிகழ்வினூடாக எமது மக்களின் மீள் எழுகைக்கு பெரும் அளவில் உதவிட முடியும். எழுத்திலும் பேச்சிலும் மட்டும் எம் விடுதலைப்பற்றை விதைந்துரைக்காமல்;, சொல்லுக்கு முன் செயல் என யதார்த்தமான மக்கள் சேவைக்கு முழு வடிவம் தர அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதற்காக எதிர்வரும் 04.02.2012 சனிக்கிழமை பிற்பகல் 17.00 மணிக்கு பேர்ன் மாவட்டத்தில் உள்ள Kirchberg என்னுமிடதில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு வாரவழிபாட்டு மன்றத்தின் “ஆதிபராசக்தி அறிவகம்” மண்டபத்தில் இதற்கான அங்குரார்பணக்கூட்டம் நடைபெற்று, இச் செயல்திட்டத்திற்கும், இந் நிகழ்வுக்கான செயல்பாட்டிற்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே மண்ணையும் மக்களையும் இதய சுத்தியோடு நேசிக்கும் அனைத்து அமைப்புக்களையும், மண்பற்றும் மக்கள்பற்றும் கொண்ட தேசநல  அபிமானிகளையும், பெருமளவு கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளையும், ஆதரவினையும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூட்டம் நடைபெறும் முகவரி:    Adhiparasakthi Arivakam
Wydenhof 3
3422 Kichberg

இங்கனம்
வரும் வழி: Bern – Zürich  Kirchberg/Burgdorf Ausfahrt                                  நிகழ்வு ஏற்பாட்டுக்குழு
எடுத்து Solothurn நோக்கி வரும் போது, Kirchberg                                       S. சிவா 078 739 03 79
Otto`s Aldi கடைக்கு அருகாமையில் மண்டபம் அமைந்துள்ளது.             S. சுரேஷ்  078 608 73 15
எழுகை
________

தொடர்புகளுக்கு

மின்னஞ்சல்  thamileelam1@gmail.com

இணையம்      www.elugai.com

நிர்வாகம்

நிர்வாகம் (சமபலம் கொண்ட 11  உறுப்பினர்கள் )
------------------------------------------------------------------
செல்வரத்தினம் சுரேஷ் (சுரேஷ் )
சண்முகம்  தவராசா (சண் தவராசா )
மருதப்பு யோகராசா (யோகி )
வேலாயுதபிள்ளை மகேசன் (சந்திரன் )
பத்மநாதன் கௌரிசங்கர் (சங்கர்)
கனகரத்தினம் பகீரதன் (பகீர் )
பொன்னையா சுப்பிரமணியம் (மணியண்ணை )
இராசமாணிக்கம்  ரவீந்திரன் (சாயி ரவி )
வினாசித்தம்பி     பாஸ்கர்
நமசிவாயம் தயானந்தன் (தயா )
சின்னதம்பி சிவானந்தம் (ஸ்ரீ )
நிதிக்குழு  
---------------
செல்லத்தம்பி சிவகுமாரன் 
கனகரத்தினம் ரவீந்திரன் (கனக ரவி )
பராக்கிரமசிங்கம் ஹேமவண்ணன் (கேசவன்)
விழாக்குழு 
-----------------
வினாசித்தம்பி   பாஸ்கரன்  
மருதப்பு  யோகராசா 
கனகரத்தினம் பகீரதன் 
சிவசம்பு சந்திரபாலன் 
நமசிவாயம் தயானந்தன் 

“சுவிஸ் தமிழர்கள் ஒன்றிணைவில் எழுகை 2012”தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தங்களால் பெரும் துன்பத்தை சுமந்து நிற்கும் எம் உறவுகள் மறுவாழ்வுக்காக ஏங்கி நின்ற போது உலகத்தின் கவனிப்பு எம் இனத்தின் முழுமையான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை!
தாயகத்தில், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழ் கட்சிகளால் கூட எம் மக்களின் அபிலாசைகளையோ, அடிப்படை வசதிகளையோ, செய்து கொடுக்கும் பொருளாதார அரசியல் பலமின்றியே இருக்கும் நிலை உள்ளது. எனவே வாழ வழியின்றி, உதவுவோர் யாருமின்றி கை காலிழந்து, வாழும் வீடிழந்து, பெற்ற பிள்ளைகளையிழந்து, கட்டிய கணவனை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, நாளைய பொழுது நமக்கானதா? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கும் எம் உறவுகளோ பல ஆயிரம். அவர்களின் வேதனைகளோ சொல்லி மாளாதவை. இவர்களில் ஒரு சிலருக்கு ஆங்காங்கே தனித்தனியாகவும், சில அமைப்புகள் சார்ந்தும், சில உதவிகளை புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் செய்து வருகின்றனர். இந்த ஒரு சிறுதுளி நம்பிக்கை மட்டும் மனதில் துளிர்விட வேதனைக்குப் பின் வசந்தம் வரும் என காத்திருக்கும் மக்களுக்கு உதவ வேண்டியது நம் தார்மீக கடமை. போரனர்தத்திற்கு பெரும் விலை கொடுத்த உறவுகளின் துயரை துடைக்க தமிழ் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி, 14.04.2012, 15.04.2012 இல் ஈழத் தமிழினம் மீண்டும் உயிர்த்தெழும் காலத்திற்காக இனியொரு விதி செய்வோம் என சுவிற்சர்லாந்து ஆன்மிக, கலை, இலக்கிய, வர்த்தக, விளையாட்டுத்துறை, தொழில்நுட்ப, ஊடக, சமூகநல அமைப்புக்களின் ஒன்றிணைவில் எழுகை 2012 எனும் நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதி அனைத்தையும் வட கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் உடலுறுப்புக்களை இழந்த வலுவற்றோர்க்கும், பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற சிறு பிள்ளைகளுக்கும், கணவனையிழந்த விதவைப்பெண்களின் சுயதொழில் மறுவாழ்வுக்குமாக, தமிழர் தாயகப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிய தகவல் சேகரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டே நிதி பகிர்ந்தளிக்கபப்படவுள்ளது.

மறுவாழ்வின் தேவையென்பது, பூதாகாரமாகவுள்ளது என்பதை அனைத்து மக்களுக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆகவே அரசியல் காழ்புணர்ச்சிகளையெல்லாம் மறந்து அனைத்து மக்களும் தாய்மை உணர்வோடு பங்கெடுத்துக்  கொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டிக் கொள்கிறோம்!
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எல்லோர்க்கும் நாடு, இனம், ஊர், உறவுப் பற்று என்பது பொதுவுடமையல்லவா? எனவே ஏனைய புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து இம்மாதிரியான மக்கள் மறுவாழ்வுப் பணி செய்தால், ஒரே நிகழ்வினூடாக எமது மக்களின் மீள் எழுகைக்கு பெரும் அளவில் உதவிட முடியும். எழுத்திலும் பேச்சிலும் மட்டும் எம் விடுதலைப்பற்றை விதைந்துரைக்காமல்;, சொல்லுக்கு முன் செயல் என யதார்த்தமான மக்கள் சேவைக்கு முழு வடிவம் தர அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதற்காக எதிர்வரும் 04.02.2012 சனிக்கிழமை பிற்பகல் 17.00 மணிக்கு பேர்ன் மாவட்டத்தில் உள்ள Kirchberg என்னுமிடதில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு வாரவழிபாட்டு மன்றத்தின் “ஆதிபராசக்தி அறிவகம்” மண்டபத்தில் இதற்கான அங்குரார்பணக்கூட்டம் நடைபெற்று, இச் செயல்திட்டத்திற்கும், இந் நிகழ்வுக்கான செயல்பாட்டிற்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே மண்ணையும் மக்களையும் இதய சுத்தியோடு நேசிக்கும் அனைத்து அமைப்புக்களையும், மண்பற்றும் மக்கள்பற்றும் கொண்ட தேசநல  அபிமானிகளையும், பெருமளவு கலந்து கொண்டு உங்கள் ஆலோசனைகளையும், ஆதரவினையும் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கூட்டம் நடைபெறும் முகவரி:    Adhiparasakthi Arivakam
Wydenhof 3
3422 Kichberg

இங்கனம்
வரும் வழி: Bern – Zürich  Kirchberg/Burgdorf Ausfahrt                                  நிகழ்வு ஏற்பாட்டுக்குழு
எடுத்து Solothurn நோக்கி வரும் போது, Kirchberg                                       S. சிவா 078 739 03 79
Otto`s Aldi கடைக்கு அருகாமையில் மண்டபம் அமைந்துள்ளது.             S. சுரேஷ்  078 608 73 15

vanakkam

Tamilwin RSS Feeds - Latest News

BBCTamil.com | முகப்பு